பாஜக தலைவர்கள் மீதான 62 குற்ற வழக்குகளை வாபஸ் பெற்றது கர்நாடக அரசு.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, பாஜக தலைவர்கள் மீதான 62 கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது, இதனால் பல்வேறு அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படுகிறது.


Advertisement

image

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான முடிவினை உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான துணைக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு எதிராக இயக்குநர் ஜெனரல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் உள்ளிட்ட மூன்று குழுக்கள் மற்றும் அரசின் வழக்கு மற்றும் சட்டத் துறை இயக்குநர் ஆகியோர் பரிந்துரை செய்துள்ளனர்.


Advertisement

திரும்பப் பெறப்பட்ட வழக்குகளில் சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி, எம்.எல்.ஏ ஆனந்த் சிங், வேளாண் அமைச்சர் பி.சி. கணேஷ், பி.ஜே.பி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் சுமலதா அம்பரிஷ், யெல்பர்கா எம்.எல்.ஏ ஹல்லாபா ஆச்சார், முதலமைச்சரின் அரசியல் செயலாளர் எம்.பி. ரேணுகாச்சார்யா மற்றும் முன்னாள் காக்வாட் எம்.எல்.ஏ கே.பி. மேகன்னவர் ஆகியோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இது ஒரு வழக்கமான விவகாரம் என்று கூறியுள்ள் சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசாமி “இதுபோன்ற வழக்குகளை அமைச்சரவை கடந்த காலங்களில் ‘பொது நலனில்’ வாபஸ் பெற்றது. இந்த 62 வழக்குகள் குறித்த முடிவு முன்னர் எடுக்கப்பட்டது, கடந்த காலங்களிலும் காங்கிரஸ் மற்றும் ஜே.டி (எஸ்) தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம்.”என்று கூறினார்

மேலும், நீதிமன்றங்கள் மீதான சுமையை குறைக்க துணைக்குழு பல வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும், ஏனெனில் இந்த வழக்குகளில் பல நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் சிறு தண்டனைகளுக்கு வழிவகுத்திருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement