சேலத்தில் வாலிபர் ஒருவரை 4 பேர் கல்லால் கொடூரமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகமது பாஷா. இவர் சேலம் டவுன் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்தக் கடைக்கு அவ்வப்போது வந்து செல்லும் களரம்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் அகமது பாஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் பிரச்னை எழுந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாஷாவை வழி மறித்த சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் ஒருவர் பாஷாவின் தலைப்பகுதியில் கல்லால் தாக்கியதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார் . இருப்பினும் அந்த கும்பல் அவரை விடவில்லை. அருகிலிருந்த கற்களை எடுத்து மீண்டும் அவரை தாக்கியுள்ளது. உயிருக்கு போராடிய நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஷா இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரின் நெஞ்சை பதற வைத்துள்ளது.
Loading More post
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ