ரூ.14 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக் சுங்க அதிகாரிகளால் அழிப்பு... காரணம் இதுதான்..

ரூ.14 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக் சுங்க அதிகாரிகளால் அழிப்பு... காரணம் இதுதான்..
ரூ.14 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக் சுங்க அதிகாரிகளால் அழிப்பு... காரணம் இதுதான்..
ரூ. 14 லட்சம் கொடுத்து வாங்கப்பட்ட ஹேண்ட்பேக்குக்கு ரூ.3,700 கட்டி சுங்க அனுமதி பெறாததால் ஹேண்ட்பேக்கை இழந்துள்ளார் பெண் ஒருவர்.
 
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரான்சில் நாட்டில் இருந்து ஹேண்ட்பேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அது முதலையின் தோலிலிருந்து வடிவமைக்கப்பட்ட பேக் என்பதால் அதன் விலை ரூ. 14 லட்சம் ஆகும்.
 
இதுபோன்ற முதலை தோல் ஹேண்ட்பேக்குகள் ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கப்படுகிறது என்றாலும், வாங்குபவர்கள் 70 டாலர்கள் கட்டி சுங்க அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அந்த பெண் சுங்க அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதனால் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆஸ்திரேலியா சுங்கத்துறையினர் அந்த ஹேண்ட்பேக்கை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ஏற்றுமதிக்கு உரிய அனுமதி பெற்ற அவர் இறக்குமதிக்கான சுங்க அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது;. இதையடுத்து ரூ. 14 லட்சம் கொடுத்து வாங்கப்பட்ட ஹேண்ட்பேக்கை சுங்க அதிகாரிகள் விதிமுறைப்படி அழித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com