OTT பக்கம் கவனம் திருப்பிய அக்‌ஷராஹாசன்..! புதிய படத்தில் ஒப்பந்தம்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஓடிடி மற்றும் யூடியூப் தொடர்களை தயாரித்துவரும் டிரெண்ட் லவுட் நிறுவனம் தற்போது தனது முதல் முழுநீள திரைப்படத்தை தயாரிக்கிறது, இந்த படத்தில் கமல்ஹாசனின் மகள் நடிகை அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்.


Advertisement

image

அமேசான், ஹாட்ஸ்டார், எம்.எக்ஸ்பிளேயர், ஜீ5, ஆகா, சோனி லிவ், வியு நிறுவனங்களுக்கு இதுவரை 15க்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்து வழங்கியுள்ளது டிரெண்ட் லவுட். இந்த நிறுவனம் தற்போது தயாரிக்கும் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட கதையில் அக்‌ஷராஹாசன் நடிக்கவிருக்கிறார். ஓரினச்சேர்க்கையாளர்களை மையப்படுத்தி தமிழின் முதல் காமெடி தொடராக ஜீ5-இல் வெளிவந்து வெற்றிபெற்ற ‘அமெரிக்க மாப்பிள்ளை’ தொடரை உருவாக்கிய இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இந்த படத்தை இயக்குகிறார்.


Advertisement

“ பதின்பருவத்தில் உள்ள அறிவார்ந்த இளம்பெண், ஒரு கட்டுப்பெட்டித்தனமான குடும்பத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கும் தவிப்புகள்தான் இப்படத்தின் கதை, இப்படத்தின் பணிபுரிவோரில் பெரும்பாலானோர் பெண்களே. இதுவரை ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தை அக்‌ஷராஹாசன் ஏற்றுள்ளார், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது” என்று சொல்கிறார் படத்தின் இயக்குனர் ராஜா ராம்மூர்த்தி

 

loading...

Advertisement

Advertisement

Advertisement