அடுத்த ஆண்டு மத்திவரை கொரோனாவுக்கு தடுப்பூசி வெளிவர வாய்ப்பில்லை-உலகசுகாதார நிறுவனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அடுத்த ஆண்டு மத்திவரை கொரோனாவுக்கு தடுப்பூசி வெளிவர வாய்ப்பில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகளில் தடுப்பூசிகள் எதுவும் இதுவரை உலக சுகாதார அமைப்பால் கோரப்பட்ட 50% தெளிவான செயல்திறனை நிரூபிக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறியுள்ளார்.


Advertisement

image

இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனையின் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யா ஒரு கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்தது, ஆனால் சில மேற்கத்திய வல்லுநர்கள் அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.


Advertisement

அதுபோல நவம்பர் 3 ம் தேதி அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாகவே அக்டோபர் பிற்பகுதியில் தடுப்பூசி விநியோகிக்க தயாராக இருக்கும் என்று பல்வேறு தகவல்கள் கசிந்தன. இந்த தடுப்பூசி அறிவிப்பு என்பது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெறுகிறாரா என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

image

“அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை பரவலான தடுப்பூசி வெளியாகும் என்று நாங்கள் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. தடுப்பூசிகளை மூன்று கட்டங்களாக சோதனை செய்யவேண்டும், ஏனென்றால் தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாம் பரிசோதித்து காண வேண்டும். சோதனைகளின் அனைத்து தரவும் பகிரப்பட்டு ஒப்பிடப்பட வேண்டும், நிறைய பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, தடுப்பூசி செயல்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த கட்டத்தில் அதன் பயனுள்ள செயல்திறன் மற்றும் பாதுகாப்பின் அளவைக் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதற்கான தெளிவான விபரங்கள் எங்களிடம் இல்லை” என்றும் ஹாரிஸ் கூறினார்


Advertisement

 WHO மற்றும் GAVI தடுப்பூசி கூட்டணி COVAX எனப்படும் உலகளாவிய தடுப்பூசி ஒதுக்கீடு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது, 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் அளவிலான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்குவதை கோவாக்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement