விஜய்யின் ’தளபதி 65’ படத்திற்கு ரஜினி பட டைட்டில்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முருகதாஸ் இயக்கத்தில் ’தளபதி 65’ படத்திற்கு ரஜினியின் தளபதி படப்பெயரையே சூட்டுவதற்கான முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


Advertisement

image

மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக நடிகர் விஜய், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் தளபதி 65 படத்தில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு  இன்னும் பெயரிடப்படவில்லை.


Advertisement

ஆனால், விஜய்யின் 65 வது படம் என்பதால், ரஜினி மம்முட்டி ஷோபனா நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தளபதி’ பட தலைப்புக்காக இக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி,கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்தான் தயாரிக்கிறது. அதனால், தளபதி டைட்டில் எப்படியும் கிடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது.

image

ஏற்கனவே, துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்கள் விஜய்-முருகதாஸ் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருந்த நிலையில் நான்காவது முறையும் இக்கூட்டணி இணையவிருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்கின்றன.


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement