"டெல்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ராஜா தான்” - ஹெச்.ராஜா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாஜக, டெல்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் ராஜா தான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


Advertisement

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின்கீழ் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு அதிகமாக உள்ள கோயில்களின் சொத்துகள், வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும். கோவில் காணிக்கைகள் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு கூறுகிறேன். அறநிலையத்துறையால் கோயில்களில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது. கோயில்களை அழிக்கும் துறையாக அறநிலையத்துறை செயல்படுகிறது. இந்துக்களை இந்து அறநிலையத்துறை சோதிக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

image


Advertisement

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய பாஜக அரசு மீதான குற்றச்சாட்டு என்பது இடிந்த திராவிடத்தின் அழுகிய மூளையின் பேச்சு. காதலால் தற்கொலை நடைபெறுவதால் காதலை தடை பண்ண கேட்க முடியுமா ? ரஜினி ஆளுமையான ஆள் என்பதால், அவர் பாஜகவில் சேர்வது குறித்து நான் கருத்து கூற முடியாது. பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. பாஜக டெல்லிக்கு ராஜா மட்டுமல்ல தமிழகத்திலும் ராஜா தான்” என்றார்.

ஆளப்போறான் தமிழன் 2021ல்?’: விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement