நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய ஏழு மாநிலங்களின் மனுவை இன்று தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாடுமுழுவதும் கொரோனாவால் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நேரத்தில், வரும் 13 ஆம் தேதி மருத்துவச் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடுமுழுவதும் வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. கொரோனா தொற்று அபாயம் இருப்பதால் கொரோனா சூழலில் நீட் தேர்வினை ஒத்தி வைக்கவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், புதுச்சேரி, மேற்குவங்கம், பஞ்சாப், மராட்டியம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஏழு ஆகிய மாநிலங்களும் நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன. அந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது, ஏழு மாநிலங்களின் மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஏற்கனவே, நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்று 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவையும் விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 17 ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?