போதை பொருள் வழக்கில் சிக்கிய பிரபல கன்னட நடிகை ராகினி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னட சினிமா துறையினருக்கு கஞ்சா, ஹெராயின் மாதிரியான போதை பொருட்களை சப்ளை செய்தமைக்காக அண்மையில் ரவிசங்கர் என்பவரை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்தனர். 


Advertisement

இதில் கன்னட நடிகை ராகினி போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. 

அதனையடுத்து அவரை விசாரணைக்காக ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் பலமுறை நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதற்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்காத நிலையில் இன்று காலை அவர் வீட்டில் சோதனை நடத்திய கையோடு போலீசார் நடிகை ராகினியை பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்திற்கு அழைத்து வந்து காவலில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த வழக்கில் கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement