2020 ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியாக வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 19-ஆம் தேதி ஆரம்பமாகி நவம்பர் 10-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Advertisement

image

இருப்பினும் தொடரில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான அட்டவணையை இதுவரை வெளியிடாமல் சஸ்பென்சாகவே வைத்துள்ளது பி.சி.சி.ஐ.


Advertisement

இந்நிலையில் 2020 ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார் பி.சி.சி.ஐயின் தலைவர் சவுரவ் கங்குலி. தனியார் ஊடக நிறுவனத்துடனான பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி.

“போட்டிக்கான அட்டவணை தாமதமாகிவிட்டது என்பது புரிகிறது. அதனை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அனைத்தும் சுமுகமாக முடிந்த பிறகு இன்று அட்டவணை வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 
Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement