நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்துக்கு அனுமதி

Question-Hour-of-30-minutes-duration-has-been-permitted-in-the-upcoming-session-of-Parliament

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அரை மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற அரசு சார்பில் தெரிவிக்கபட்டிருந்தது. இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் செயல் என்றும், அடிப்படை அரசியலுக்கு எதிரானது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

image


Advertisement

இந்நிலையில் நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் அரை மணி நேரம் மட்டுமே கேள்வி நேரத்திற்கு அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த அமைச்சரிடம் இருந்து நேரடியாக பதிலை பெறும் வகையிலான கேள்விகளுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வ பதிலை பெறக்கூடிய கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றம் : புதிய எஸ்.பியாக கார்த்திக் நியமனம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement