துரைமுருகன், டி.ஆர். பாலுவிற்கு ரஜினி வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

திமுக பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மறைவைத் தொடர்ந்து அப்பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் பதவிக்கு பொருளாளர் துரைமுருகன் போட்டியிட்டார். இதற்கான வேட்புமனுவை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அவர் அளித்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட்டதால் , அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வேட்புமனுத் தாக்கல் செய்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்ரமணியன் உள்ளிட்டோருடன் சென்று அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தனது வேட்புமனுவை அளித்தார்.

பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகினர். அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் வகித்த பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்வானது மகிழ்ச்சி அளிப்பதாக துரைமுருகன் தெரிவித்தார்.


Advertisement

இந்நிலையில், துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலுவிற்கு நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

“ரஜினி விரும்பினால் பாஜக கூட்டணி வைக்கலாம்” - நயினார் நாகேந்திரன்

loading...

Advertisement

Advertisement

Advertisement