“ரஜினி விரும்பினால் பாஜக கூட்டணி வைக்கலாம்” - நயினார் நாகேந்திரன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சட்டமன்ற தேர்தலில் ரஜினி விருப்பப்பட்டால் பாஜக அவருடன் கூட்டணி வைக்கலாம் என பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


Advertisement

2021ஆம் ஆண்டு தேர்தலை சந்திப்பது குறித்தும், கூட்டணி குறித்தும் பாஜகவின் 11 மாவட்ட மையக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நெல்லையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்றால், எப்படி தயார்படுத்தி கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை செய்கிறோம். அதிமுக, திமுக பெரிய கட்சி தான். ஆனால் பாஜக உட்பட எந்த கட்சியும் தனியாக போட்டியிட்டால் தான் வாக்கு வங்கி என்ன என்பது தெரியும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ரஜினி விருப்பப்பட்டால் பாஜக அவருடன் கூட்டணி வைக்கலாம்” என்றார்.

image


Advertisement

அத்துடன், “வருகின்ற கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் உறுதியாக வெற்றி பெறுவார். கட்சி வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட தயார். பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் பதவி கிடைத்தால் மகிழ்ச்சிதான்” என்றார்.

“இந்த மாதத்திற்குள் சசிகலா விடுதலை ஆவார்” - வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன்

loading...

Advertisement

Advertisement

Advertisement