ஒரு பெண்ணை சூழ்ந்து கட்டைகளால் சரமாரியாக தாக்கும் பெண்கள் - அதிர்ச்சி அளித்த வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹரியானாவில் பிவானி மாவட்டத்தில் பல பெண்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணை கம்பியாலும், கட்டைகளாலும் கொடூரமாக தாக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

கோவிலில் டோலக் வாசிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்ணின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து மற்றொரு பெண்ணை தாக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணை சுற்றி வளைத்து எல்லா பக்கத்திலிருந்தும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது.

முதலில் தாக்கப்பட்ட பெண் கோவில் டோலக் வாசிக்கும்போது மற்றொரு பெண்ணுடன் தகராறு ஏற்பட்டு பலமாகத் தாக்கியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் சேர்ந்து இந்த பெண்ணை அடித்து உதைத்துள்ளனர். இப்போது இரண்டு பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


Advertisement

image

இரும்புக் கம்பிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டதால், அந்த பெண்ணை பிஜிஐ ரோஹ்தக்கில் சிகிச்சை பெற்றுவருகிறார். இருதரப்பிலிருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஸ்ரீ பகவான் கூறியுள்ளார்.

 இந்த செய்தியின் வீடியோவுக்கு,,https://www.timesnownews.com/mirror-now/crime/article/hooliganism-in-haryanas-bhiwani-as-group-of-women-attack-another-woman-with-iron-rods-watch/647015


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement