”பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டியதால் மனைவி தற்கொலை செய்துகொண்டார்” கணவர் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆகஸ்ட் 25ஆம் தேதி உத்தரபிரதேசம் மீரட் மாவட்டத்தின் மாவானா நகரில் 28 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். உள்ளூர் நபர்களின் மிரட்டல் மற்றும் பாலியல் அச்சுறுத்தலால்தான் தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாக அந்த பெண்ணின் கணவர் சந்தீப் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.


Advertisement

மாவானா வட்ட அலுவலரை அணுகிய சந்தீப், உள்ளூரைச் சேர்ந்த இரண்டு நபர்கள் தனது மனைவியை மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தவேண்டும் என்றும், அவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

image


Advertisement

அர்ஜுன் என்ற நபர் தொடர்ந்து அவர் வீட்டுக்கு வந்து, திருமணத்தை மீறிய உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாலும், சர்ச்சைக்குரிய புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு அவரை மிரட்டியதாலும்தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சந்தீப் கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விஷயம் தெரிந்த சந்தீப், தனது மனைவியை துன்புறுத்த வேண்டாம் என அர்ஜுனிடம் கூறியதாகவும், தவறான வழக்கில் சிக்கவைத்துவிடுவேன் என அர்ஜுன் தன்னை மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். சந்தீப் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்ததன்பேரில் போலீஸார் விசாரிப்பதாகக் கூறியுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement