திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு - போட்டியின்றி தேர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியிருக்கிறது.


Advertisement

திமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் இந்த பதவிகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளது உறுதியாகியுள்ளது.

image


Advertisement

தான் திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “நான் திமுகவில் தொண்டனாக சேர்ந்து இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி மட்டுமின்றி அதிர்ச்சியும் இருக்கிறது. அவ்வளவு பெரிய தலைவர்கள் வகித்த பதவியில் நான் சிறப்பாக பணியாற்ற முடியுமா என்ற பயமும் இருக்கிறது” என்றார்.

முதலாம், 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் - உச்சநீதிமன்றம்

loading...

Advertisement

Advertisement

Advertisement