மனைவி இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் கணவரும் உயிரிழப்பு... கோவையில் சோகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் மனைவி இறந்த தகவல் கேட்டு கணவனும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கோவை சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் பேஸ்-1 பகுதியை சேர்ந்தவர் மணி (74). தனியார் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருடைய மனைவி சரோஜினி (72). இவரும் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

image
சரோஜினி கடந்த எட்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மோசமானது. இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.


Advertisement

மனைவி சரோஜினி உயிரிழந்ததை அறிந்த கணவர் மணி அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி இறந்த செய்தியை கேட்ட ஒருமணி நேரத்தில் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement