புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டர் சுப்ரமணியன் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
புதுச்சேரி மக்கள் நீதி மய்ய மாநில தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டர் சுப்ரமணியன் (70) கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 1985-90 ல் உருளையன்பேட்டை தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், 2001-ம் ஆண்டு முதல் 2011 வரை முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 2012-2014 வரை திமுக அமைப்பாளராக இருந்த இவர் 2018-ம் ஆண்டு முதல் மக்கள் நீதி மையத்தின் மாநில தரைவராக இருந்து வந்தார். கொரோனா தொற்றால் உயிரிழந்த இவருக்கு முதலமைச்சர் நாராயணசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்