கூரையில் சண்டையிட்டுக் கொண்ட மெகா சைஸ் மலை பாம்புகள்.. நேரில் பார்த்தவர் அதிர்ச்சி..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள கான்கிரீட் வீட்டின் உரிமையாளர் ஒருவர், எப்போதும்போல அவரது பணிகளை முடித்துக் கொண்டு கடந்த திங்களன்று வீட்டுக்கு திரும்பியுள்ளார்.


Advertisement

வீட்டின் சமையலறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியது போல கிடந்துள்ளன. சந்தேகத்ததோடு வீட்டின் சீலிங்கை பார்த்தவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. 

இரண்டு பெரிய சைஸ் மலை பாம்புகள் அவர் வீட்டு சீலிங்கில் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை பார்த்ததும் அந்த பாம்புகளை பிடிக்க உள்ளூரில் உள்ள பாம்பு பிடிப்பவருக்கு தகவலை சொல்லியுள்ளார். 


Advertisement

image

‘எனக்கு போன் வந்ததும் அவர் வீட்டுக்கு விரைந்தேன். அங்கிருந்த பாம்புகள் ரெண்டுமே மலைப்பாம்புகள். கடற்கரை ஓரத்தில் வசிக்கக் கூடியவை. நான் பார்த்த பாம்புகளிலேயே இது மெகா சைஸ் பாம்புகள். இரண்டுமே ஆண் பாம்புகள். அதில் ஒன்று 9.5 அடி, மற்றொன்று 8.2 அடி நீளம் கொண்டிருந்தது. இணை சேருவதற்காக இந்த பாம்புகள் அடித்துக் கொண்டிருக்கலாம் என தோன்றுகிறது. இரண்டையும் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார் பாம்பு பிடிப்பதில் வல்லவரான ஸ்டீவன் பிரவுன். 

அந்த பாம்புகளின் வீடியோவை ஸ்டீவ் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதற்கு லைக்ஸ்களும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement