[X] Close >

பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம் ஹேக்!

Twitter-account-of-PM-Narendra-Modi---s-personal-website-hacked

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் ஐடி ஹேக் செய்யப்பட்டுள்ளது.


Advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள narendramodi_in என்ற ட்விட்டர் பக்கத்தை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

வெரிஃபைட் செய்யப்பட்ட இந்த ட்விட்டர் அக்கவுண்ட், வியாழக்கிழமை அதிகாலையில் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. கோவிட் -19 க்கான பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு, கிரிப்டோ கரன்சியை தாராளமாக நன்கொடை வழங்குமாறு பதிவிடப்பட்ட போலி ட்வீட்டுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.


Advertisement

image

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்தின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை ட்விட்டர் உறுதிப்படுத்தியதோடு, அது செயல்பாட்டை அறிந்திருப்பதாகவும், வெரிஃபைடு பக்கங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

"நாங்கள் நிலைமையை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம், இந்த நேரத்தில், கூடுதல் கணக்குகள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்குத் தெரியாது" என்று ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்த ட்விட்டர் பக்கத்தை ஜான் விக் (hckindia@tutanota.com) என்பவர் ஹேக் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close