வெள்ளத்தில் சிக்கிய குரங்கு: துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்! வீடியோ

Monkey-trapped-in-flood--Fire-department-rescues-

 ஒடிசாவில் வெள்ள பாதிப்பால் நீர்தேக்கத்தில் சிக்கிய குரங்கை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

image

 ஒடிசாவில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது. மின்னல் தாக்கியதில் 12 வயது சிறுமி உட்பட 6 பேர் பலியாகியுள்ளர். மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால், வாயில்லா ஜீவன்களான விலங்களின் நிலைமையை சொல்லவும் வேண்டுமா?


Advertisement

 

நேற்று இரவு ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் குரங்கு ஒன்று  நீர்த்தேக்கத்தில் மாட்டிக்கொண்டது. இதனைப்பார்த்த உள்ளூர் மக்கள் தகவல் கொடுக்கவே தீயணைப்புத் துறையினர் குரங்கை பத்திரமாக மீட்டுள்ளனர். அந்த வீடியோவில் வீரர்கள் உயிர்காக்கும் வளையத்தின் உதவியுடன் குரங்கை கரைக்கு காப்பாற்றி வந்தனர். கரைக்கு வந்ததும், அந்த குரங்கை தூக்க முயற்சிக்கின்றனர். ஆனால், தன்னை காப்பாற்றிய வீரர்கள் மீது சீறி குரைக்கிறது. இந்த வீடியோ ஒடிசாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

 

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement