குஜராத்: இறந்து 3,4 ஆண்டுகளுக்கு பிறகும் 100 நாள் திட்டத்தில் ஊதியம் பெறுவதாக கணக்கு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பலூந்திரா கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் இறந்த 5 நபர்கள் பெயரில் ஊதியத்தை வாங்கி ஏமாற்றியுள்ளனர். இறந்த அந்த 5 நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் அரசாங்கத் திட்டத்தின்கீழ் வேலைசெய்தது அவர்களுக்கு தெரியாது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளனர்.


Advertisement

குஜராத் -ராஜஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பலூந்திரா கிராமத்தில் சுமார் 6000 பேர் வசிக்கின்றனர். இதில் சுமார் 800 பேர் எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டத்தின்கீழ் வேலை செய்துவருகின்றனர். ஆனால் அதில் இறந்துபோன 5 நபர்கள் பேரில் ஏப்ரல் மாதம்வரை வாரக்கூலியாக ரூ.900 பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் 2016 -19க்கு இடைப்பட்ட காலத்தில் இறந்தவர்கள்.

image


Advertisement

இதில் ஒருவரான பேஹ்ரா வசியாவின் தந்தை கூறுகையில், அவரது மகன் 29 வயதில் சாலை விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவருக்கு 5 குழந்தைகள் இருப்பதாகவும், தினமும் நாளைக் கடத்துவதே சிரமமாக இருக்கும்போது ஏழை மக்களை அதிகாரிகள் இதுபோல் ஏமாற்றுவது வேதனை அளிப்பதாக இருப்பதாகக் கூறுகிறார்.

இதில் ஊழல் செய்த பலூந்திரா கிராமத்தின் வாட்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மற்றும் உள்ளூர் ஆர்வலர் கிரண் பார்மர் ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement