[X] Close

தொற்று பாதிக்காத நபருக்கு கொரோனா வார்டில் சிகிச்சை?: ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
தொற்று பாதிக்காத தனக்கு கொரோனா வார்டில் நான்கு நாட்கள் சிகிச்சை அளித்ததாக கூறி, ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் நெல்லையை சேர்ந்த ஒருவர்.
 
நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (35). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், மீனாட்சிபுரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் உரிமையாளர் இவர் குடியிருக்கும் வீட்டின் அருகே குடியிருந்து வரும் நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
 
image
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி அன்று சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா என நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி மாதிரி எடுத்து சோதித்துள்ளனர். மறுநாள் 8-ம் தேதி காலையில் தொலைபேசி மூலம் சிவசுப்பிரமணியனுக்கு மட்டும் தொற்று இருப்பதாக கூறி உள்ளனர்.
 
அன்று மதியம் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்த அவருக்கு காய்ச்சல், இருமல் என எந்த அறிகுறியும் இல்லை என கூறப்படுகிறது. எனினும் நான்கு நாட்கள் மருந்து மாத்திரைகளை கொடுத்து வந்துள்ளனர்.
 
12-ம் தேதி காலையில் அவரை டிஸ்சார்ஜ் செய்யப்போவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் சிவசுப்பிரமணியன், ‘’நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நெகட்டிவ் என்று சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே பணிக்கு செல்ல முடியும். நீங்கள் நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்கிறீர்களே’’ என கேட்டுள்ளார்.
 
அதன் பின்னர் மூன்றாம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், 4 நாட்கள் காய்ச்சல், 4 நாட்கள் இருமல் இருந்ததாகவும் தற்போது குணமாகி 12-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்வதாகவும் போலியாக டிஸ்சார்ஜ் சம்மரி தயாரித்து அதில் அதிகாரிகள் கையெழுத்திட்டு தன்னை கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
image
மருத்துவமனை நிர்வாகம் அளித்த மருத்துவ அறிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கு 4 நாட்கள் முன்பிருந்தே அவர் சிகிச்சை பெற்று வருவதாக பதிவு செய்துள்ளதை பார்த்து அதிர்ந்துபோயுள்ளார்.
 
கொரோனா பாதிக்காத தன்னை 4 நாட்கள் கொரோனா வார்டில் அனுமதித்து, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்படைய வைத்ததோடு தனது குடும்ப உறுப்பினர்களையும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தொல்லை செய்ததாக கூறியுள்ள சிவசுப்பிரமணியன், நெல்லை அரசு மருத்துவமனை மீது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
 
loading...

Advertisement

Advertisement

Advertisement