உலக பணக்காரர்கள் பட்டியல்: ஃபேஸ்புக் நிறுவனரை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெஸ்லாவின் பங்குகளின் முன்னேற்றத்தால் ஃபேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கை பின்னுக்கு தள்ளி  உலகின் மூன்றாவது பெரும் பணக்காரரானார் எலோன் மஸ்க்.


Advertisement

image

உலக பணக்காரர்கள் குறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் படி எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 115.4 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 110.8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.


Advertisement

டெஸ்லாவின் பங்குகள் 475 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்ததால் இந்த ஆண்டு அவரது நிகர சொத்து மதிப்பு 76.1 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. 

கடந்த வாரம் எலோன் மஸ்க் நூறு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் பில் கேட்ஸுடன் தனது தொழில்நுட்ப பங்குகள் உயர்ந்ததால் அந்த பட்டியலில் இணைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

image


Advertisement

உலகின் பெரும் பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement