பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பவன் கல்யாண் ரசிகர்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கு இன்று பிறந்த நாள். 


Advertisement

image

அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள அவரது ரசிகர்கள் பேனர் கட்டுவதும், போஸ்டர் ஓட்டுவது என மும்முரமாக இருந்தனர். 


Advertisement

இந்நிலையில் நேற்று ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சாந்திபுரம் பகுதியை சேர்ந்த பவன் கல்யாணின் ரசிகர்கள் ஆறு பேர் நேற்று இரவு பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இரும்பு சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை சாலையின் ஓரத்தில் நிலை நிறுத்த முயன்ற போது அதன் அருகே இருந்த மின்சார வயரில் அந்த பேனர் உரசி உள்ளது. அதனால் மின்சாரம் தாக்கியத்தில் சம்பவ இடத்திலேயே சோமசேகர் (30), ராஜேந்திரா (32) மற்றும் அருணாச்சலம் (28) ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

image


Advertisement

இதற்கு நடிகர் பவன் கல்யாண் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் அவரது நடிப்பில் வெளிவரவுள்ள ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான வக்கீல் சாப் படத்தின்  தயாரிப்பாளர் போனீ கபூர் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாயை அளிக்க உள்ளதாக உறுதி கொடுத்துள்ளார். அதோடு அவரது வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். 

நடிகர் பவன்  கல்யாண் தனது பிறந்த நாளை ரசிகர்கள் பேனர் கட்டி கொண்டாட வேண்டாம் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்திருந்த சூழலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement