சிஎஸ்கே அணியிலிருந்து விலகிய ரெய்னா - அன்றே கணித்த ஆர்ச்சர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியதை வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் அன்றே கணித்ததாக ரசிகர்கள் கிண்டலாக தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரிலிருந்து அண்மையில் விலகினார். கடந்த சனிக்கிழமை தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தியாவும் திரும்பினார். அவரது இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரங்களிலும், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பின.

imageசுரேஷ் ரெய்னாவிற்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு, அதன் காரணமாக தான் அவர் வெளியேறினார் என ஒரு தரப்பு தெரிவித்தது. மற்றொரு புறம் தோனிக்கு கொடுத்தது போன்றே பால்கனி அறை கொடுக்கப்படவில்லை என ரெய்னா அணி நிர்வாகத்திடம் கோபித்துக்கொண்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.


Advertisement

image

அதுமட்டுமின்றி ரெய்னாவிற்கு ஆதரவாக தோனி எதுவுமே பேசவில்லை என்றும், அதனாலேயே ரெய்னா அதிருப்தி அடைந்து வெளியேறியதாக பேசப்பட்டது. இப்படியாக பல காரணங்கள் வெளியாக, ரெய்னாவின் மாமா வீட்டில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலே அவர் ஊர் திரும்ப காரணம் எனப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் இன்று தனது மாமா உட்பட உறவினர்கள் இருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், சிலர் படுகாயமடைந்திருப்பதாகவும் ரெய்னா தெரிவித்திருந்தார். இருப்பினும் ரெய்னா அணியிலிருந்து வெளியேறியதன் காரணங்கள் இன்னும் ஓய்வு பெறவில்லை.

இந்நிலையில் 2014ஆம் ஆண்டு ரெய்னா குறித்து இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் தெரிவித்திருந்த கருத்துகள் தற்போது, ரெய்னாவின் சூழ்நிலைக்கு முற்றிலும் பொருந்துவதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 2014ஆம் ஆண்டு ஆர்ச்சர் தெரிவித்திருந்த கருத்தில், “செல்லாதீர்கள் ரெய்னா. ரெய்னா எப்படி வெளியேறினார் ?” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து ரெய்னா தற்போது ஐபிஎல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகியதற்கு முற்றிலும் பொருந்துவதாக பகிரப்பட்டு வருகிறது.

13 பேர் தவிர்த்து மற்ற அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் : சிஎஸ்கே சிஇஓ புதிய அறிவிப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement