கலைவாணர் அரங்கில் வரும் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 14 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது.


Advertisement

செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கத்தை சபாநாயகர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 110 விதியின் கீழ் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் கொரோனா காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை தரப்பில் சிறப்புச்சட்டம் இயற்றப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகளை பொருத்தவரை தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள் எனவும் தெரிகிறது.


Advertisement

சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டுவதற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடித்து கலைவாணர் அரங்கத்தில் 3வது தளத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement