[X] Close

"தேவையில்லை ஓடிடி... ஒன்லி தளபதி திரையில்" மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தி மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

image

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், எடுத்து முடிக்கப்பட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தியேட்டரில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement

நடிகர் சூர்யா, தான் நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தை அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிட உள்ளதாக அறிக்கை மூலம் தெரிவித்தார். நடிகர் சூர்யாவின் இந்த அறிவிப்பை திரைத்துறையினர் சிலர் வரவேற்ற நிலையில் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பியது.

தொடர்ந்து கொரோனா நெருக்கடியால் பல திரைப்படங்கள் ஓஓடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தற்போதைய சூழ்நிலையில் திரையரங்கில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது இந்நிலையில் மதுரையில் அவரது ரசிகர்கள் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக கூடாது என நடிகர் விஜய்க்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


Advertisement

”மாஸ்டர் தளபதிக்கு அன்பான வேண்டுகோள்; எங்களுக்கு தேவை இல்லை ஓடிடி, எங்களுக்கு தேவை ஒன்லி தளபதி திரையில்” எனக்குறிப்பிட்டு; போஸ்டர்களை ஓட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகக்கூடாது என்ற அவரது ரசிகர்களின் மனநிலையை குறிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. இதுபோன்று இதற்கு முன்பு விஜய் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement