நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தி மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், எடுத்து முடிக்கப்பட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தியேட்டரில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா, தான் நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தை அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிட உள்ளதாக அறிக்கை மூலம் தெரிவித்தார். நடிகர் சூர்யாவின் இந்த அறிவிப்பை திரைத்துறையினர் சிலர் வரவேற்ற நிலையில் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பியது.
தொடர்ந்து கொரோனா நெருக்கடியால் பல திரைப்படங்கள் ஓஓடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தற்போதைய சூழ்நிலையில் திரையரங்கில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது இந்நிலையில் மதுரையில் அவரது ரசிகர்கள் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக கூடாது என நடிகர் விஜய்க்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
”மாஸ்டர் தளபதிக்கு அன்பான வேண்டுகோள்; எங்களுக்கு தேவை இல்லை ஓடிடி, எங்களுக்கு தேவை ஒன்லி தளபதி திரையில்” எனக்குறிப்பிட்டு; போஸ்டர்களை ஓட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகக்கூடாது என்ற அவரது ரசிகர்களின் மனநிலையை குறிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. இதுபோன்று இதற்கு முன்பு விஜய் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?