உ.பியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்குக் கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரபிரதேசத்தில் ஷாம்லி மாவட்டத்தில் ஒரே பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


Advertisement

ஷாம்லி மாவட்டத்தின் பண்டா நகரில் புட்டா குவான் என்ற பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த 32 பேர் உட்பட மொத்தம் 44 புதிய பாதிப்புகள் இந்த மாவட்டத்தில் நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என தலைமை மருத்துவ அதிகாரி என்.டி.ஷர்மா கூறியுள்ளார். இதுவரை இந்த மாவட்டத்தில் 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் இறந்துவிட்டதாகவும், 360 தீவிர கண்காணிப்பில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 439 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

image


Advertisement

இதற்கிடையே, கான்பூரில் பத்திரிகையாளரான நீலன்ஷூ சுக்லா(28 வயது) என்பவர் கொரோனாவால் இறந்தார். அவர் இறப்பதற்கு முன்பு, துரதிர்ஷ்டவசமாக அறிகுறிகள் எதுவும் இல்லாதபோதும் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்களை சுய தனிமைப் படுத்திக்கொள்ளுமாறும் தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற ஊழியர்கள் 3 பேருக்கு கொரோன தொற்று உறுதியானதை அடுத்து ஷாம்லி மாவட்ட நீதிபதியான சஞ்சய் குமார் கைரானாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் இரண்டு நாட்களுக்கு மூடும்படி உத்தவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement