கன்னியாகுமரி: சீட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது தகராறு - ஒருவர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னியாகுமரி அருகே சீட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

குமரி மாவட்டம் அருமனை, இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுசீந்திரன்(60). கார் ஓட்டுநராக இருந்தார். இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட மோதலில் கார் ஓட்டுனர் சுசீந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜெயபிரகாஷ்(50) மற்றும் மெரிலின் ஜோஸ் (45) ஆகியோரை தேடி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement