இரவு 9 மணிவரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 160 நாட்களுக்கு பின்னர் மாநகரப் பேருந்துகள் இன்று இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்ட்ரல் பனிமணையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் 6,090 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது. பேருந்து இயக்கப்பட்ட முதல் நாளான இன்று பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வரும் காலங்களில் தேவைக்கு ஏற்ப பேருந்து சேவை அதிகரிக்கப்படும். மாநகர பேருந்துகள் மாவட்ட எல்லை அருகில் உள்ள நிறுத்தங்கள் வரை செல்லும். அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை இயக்கப்படும்.
மக்கள் தேவைக்கு ஏற்ப படிப்படியாக தளர்வுகள் கொண்டு வரப்படும். மாவட்டங்களுக்கிடையே பேருந்து இயக்குவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார். பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பில்லை. புதிய பஸ் பாஸ் நாளை முதல் வழங்கப்படும். பழைய பாஸ் செப் 15-ம் தேதி வரை செல்லுபடியாகும்” எனத் தெரிவித்தார்.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு