'தோனி எதுவுமே நடக்காதது போல இருப்பார்; அவர் கிரிக்கெட்டின் யோகி' - ஸ்ரீநாத்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தோனி ஒரு கிரிக்கெட் யோகி என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.


Advertisement

DRS with Ash என்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீநாத் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பல நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது தோனி குறித்தும் முதன்முதலாக தோனியை சந்தித்தது குறித்தும் பேசினார்.

image


Advertisement

அதில், 2003ம் ஆண்டு இந்தியா-கென்யா-பாகிஸ்தான் ( ஏ அணி) இடையேயான மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போதுதான் நான் தோனியை முதன்முதலாக சந்தித்தேன். அந்த தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தனி ஆளாக நின்று இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். பள்ளி கிரிக்கெட் போல அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் சிதறடித்தார்.

image

தோனி ஒரு கிரிக்கெட் யோகி. அதனால்தான் விளையாட்டை சரியாக கணிக்கிறார். வெற்றி பெற்று கோப்பையை வாங்குகிறார். அதனை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார். போட்டியின் போது நிலைமை சரியில்லை என்றாலும், அணி இக்கட்டான நிலையில் இருந்தாலும் எதுவுமே நடக்காதது போல தோனி இருக்கிறார். அதனால் அதான் அவர் கிரிக்கெட்டின் யோகி. என தெரிவித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement