உலகின் மிகப்பெரிய அட்லஸ் அந்துப்பூச்சி, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வக வளாகத்தில் சுற்றிவருவது கண்டுபிடிப்பு. 25 செமீ அகலமுள்ள அட்லஸ் அந்துபூச்சி இது என விஞ்ஞானிகள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வான் இயற்பியல் மைய வளாகத்தில், உலகின் மிகப்பெரிய அட்லஸ் அந்துப்பூச்சி சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இறக்கைகள் விரிந்த நிலையில் 25 செமீ அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய அந்துப்பூச்சியாக இது பதிவாகியுள்ளது. ஆய்வக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த அட்லஸ் அந்துப்பூச்சி.
ஆசிய மலைக்காடுகளில் இதுவரை 24 செ.மீ அகலமுள்ள அந்துப்பூச்சிகளும், தமிழக மேற்கு தொடர்ச்சி மலை ஏற்காட்டில் 19 செ.மீ அகலமுள்ள அட்லஸ் அந்துப்பூச்சிகளும் ஏற்கெனவே கண்டறியப்பட்டு பதிவாகியுள்ளது. ஆனால் இப்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள அட்லஸ் அந்துப்பூச்சி 25 செ.மீ அகலமுள்ளதாக இருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்துப்பூச்சி உயிருடன் வான் இயற்பியல் வளாகத்தில் சுற்றித்திரிவதால் அதனை சுதந்திரமாக விட்டுவிட்டதாகவும், 20 நாட்கள் மட்டுமே உயிர் வாழும் இந்தபூச்சி, 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள வளாகத்தில் எங்காவது இறந்து கிடந்தால், அதை பத்திரமாக எடுத்து வைக்க முயற்சி செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!