கொரோனா தடுப்பு வழிக்காட்டு முறைகளின்படி பிரணாப் முகர்ஜிக்கு இன்று இறுதிச் சடங்கு !

Pranab-Mukherjee-last-rites-today

கொரோனா தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளின் படி பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 3 கட்டங்களாக அஞ்சலி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பிரணாப்பின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம். அதன் பின் மற்ற பிரமுகர்கள் காலை 11 மணி வரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒருமணி நேரம் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் பிரணாப் முகர்ஜியின் உடல் வைக்கப்படவுள்ளது. அதன்பின் திறந்த ராணுவ வாகனத்திற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட வேனில் வைத்து பிரணாப்பின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கொரோனா தடுப்பு வழிக்காட்டுதல் நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement