இளம்பெண் ஒருவர் வீட்டு முற்றத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது வாய் வழியாக நுழைந்த 4 அடி நீள பாம்பு வயிற்றுக்குள் சென்றுள்ளது.
தகெஸ்தானில் உள்ள லெவாஷி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளியில் தூங்கி உள்ளார். காலையில் அவர் கண் விழித்தபோது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப் போன்றும் குமட்டல் உணர்வு ஏற்படுவதைப் போன்றும் உணர்ந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காட்டியுள்ளார்.
அவரது வயிற்றுக்குள் ஏதோ உயிரினம் புகுந்துள்ளது என்பதை உறுதி செய்த மருத்துவர்கள், உடனடியாக அவரது வயிற்றினுள் புகுந்த உயிரினம் என்ன என்பதை தெரிந்து வெளியேற்றுவதற்காக எண்டோஸ்கோபி கருவியை வாய் வழியாக செலுத்தி வயிற்றுக்குள் தேடியுள்ளனர். பின்னர் அதனுடன் சேர்ந்து அந்த உயிரினத்தை வெளியில் பிடித்து இழுத்துள்ளனர்.
எண்டோஸ்கோபி கருவியுடன் நீளமாக வந்ததைப் பிடித்து இழுத்த பெண் மருத்துவர், முதலில் அது என்ன என்பதைக் கவனிக்கவில்லை. ஆனால், முழுவதும் வெளியே எடுத்த போது, அது ஒரு 4 அடி நீள பாம்பு என்பதை உணர்ந்ததும், பதறி பின்வாங்குகிறார். இந்த வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலாகியுள்ளது.
பாம்பு இன்னும் உயிருடன் இருக்கிறதா அல்லது அப்பெண்ணின் வயிற்றுக்குள் எவ்வளவு நேரம் இருந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, இதுபோன்ற சம்பவங்கள் அக்கிராமத்தில் சகஜமானவை என்றும் திறந்தவெளியில் தூங்குவதை மக்கள் தவிர்க்குமாறு பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
زحف عبر فمها أثناء نومها.. فيديو مروع للحظة سحب ثعبان من حلق امرأة https://t.co/6iUSk3oU2U#البيان_القارئ_دائما pic.twitter.com/3Q1YiYdV7R— صحيفة البيان (@AlBayanNews) August 31, 2020
Loading More post
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
பாமக விரும்பும் 23 தொகுதிகள் எவை? - அதிமுகவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு: ஆன்லைன் மூலம் கையெழுத்தான ஒப்பந்தம்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?