'ரெய்னாவுக்கு சென்னை அணி ஆதரவு உண்டு'-சிஎஸ்கே நிர்வாகம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுரேஷ் ரெய்னா குறித்த என்.சீனிவாசனின் கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.


Advertisement

ஐபிஎல் மிகவும் நெருங்கிவிட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சர்ச்சை ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அந்த அணி நிர்வாகம் சார்பில் ட்விட்டரில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ‌சூப்பர் கிங்ஸ் அணி பத்தாண்டுகளுக்கு மேலாக ஒரு குடும்பமாக திகழ்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

image


Advertisement

சுரேஷ் ரெய்னா துன்பம் நிறைந்த கட்டத்தில் உள்ள நிலையில் அவருக்கு அணி முழு ஆதரவாக இருக்கிறது என ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சுரேஷ் ரெய்னா சொந்த காரணத்திற்காக எனக் கூறி, ஐபிஎல் தொடரிலிருந்து விலகி திடீரென நாடு திரும்பிவிட்டார். துபாயில் தான் விரும்பிய அறை கொடுக்கப்படாததால் கோபித்துக்கொண்டார் என்றும் எனவேதான் வெளியேறிவிட்டார் என்றும் தகவல் வெளியானது.

மேலும் சிஎஸ்கே அணியின் என்.சீனிவாசன், சிலர் தாங்கள்தான் சூப்பர் ஸ்டார் போன்று செயல்படுவதாகவும் சில நேரங்களில், வெற்றி சிலருக்கு தலைக்கனத்தை ஏற்படுவதாகவும் ரெய்னா குறித்து விமர்சித்திருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement