[X] Close

மூவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி 8 மாத கர்ப்பம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனித்தனியாக 3 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 17வயது சிறுமி எட்டு மாத கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றவாளிகள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.


Advertisement

image

காவேரிப்பட்டினம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 10 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய அந்த சிறுமி கடந்த ஒரு வருடமாக மாமாவின் வீட்டிலும், தாயின் வீட்டிலும் மாறி மாறி தங்கியிருந்தார். மாமாவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் உதயணன் மற்றும் தாயின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் உறவினர்களான. சக்தி மற்றும் ராமராஜ் ஆகியோர் இந்த பெண்ணை தனித்தனியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர், இந்த தகவலை அந்த சிறுமி குடும்பத்தாரிடம் கூறவில்லை.


Advertisement

அதன்பிறகு சில மாதங்களாக அந்த பெண் தனது தாயிடம் மாதவிலக்கு இல்லை என்று கூறியுள்ளார், ஆனால் சிறுமிக்கு வேறு எந்த வலியும் இல்லாததால் அவளுடைய தாய் அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் வயிறின் அளவு பெரிதான காரணத்தால் குடும்பத்தினர் தற்போது மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, டாக்டர்கள் சிறுமியின் குடும்பத்தினரிடம் அவர் எட்டு மாத கர்ப்பிணி என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, சிறுமி தனது குடும்பத்தினரிடம் பாலியல் வன்கொடுமை பற்றி கூறியுள்ளார். காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டவுடன் உதயனன் மற்றும் சக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர், ஆனால் ராம்ராஜ் தலைமறைவாகிவிட்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement