[X] Close

பெண் அதிகாரியை குடிபோதையில் துன்புறுத்திய போலீஸார் - காப்பாற்ற வந்த மைத்துனர் சுட்டுக்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பஞ்சாப் படாலாவில் ஒரு பெண் கலால் அதிகாரியை 6 போலீஸார் குடிபோதையில் துன்புறுத்தியுள்ளனர். அதைக் கேட்கவந்த அந்த பெண்ணின் மைத்துனரை பணித் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.


Advertisement

அமர்ப்ரீத் கவுர் என்ற பெண் கலால் அதிகாரியை போலீஸார் குடிபோதையில் துன்புறுத்தி உள்ளனர். இதனால் அவர்கள் ஆறுபேரையும் படாலா போலீஸார் கைதுசெய்துள்ளனர். ஒரு பெண்ணின் வாகனத்தை துரத்திச் சென்றதுடன் அவர் உறவினரைச் சுட்டுக் கொன்றாதற்காக 5 போலீஸார் உட்பட 6 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை கவுர் படாலாவின் பகவான்பூர் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். இரண்டு வெவ்வேறு கார்களில் வந்த 6 பேர் மாறி மாறி அவரைத் துரத்தி, துன்புறுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement

அவர்கள் கவுரைத் துரத்திச் சென்று வழி மறித்துள்ளனர். அவரது பணி அடையாளத்தை அவர்களிடம் கூறியும், அவரை துன்புறுத்துவதை அவர்கள் நிறுத்தவில்லை. எனவே அவர் மைத்துனரை உதவிக்காக அழைத்துள்ளார். 28 வயதான குர்மேஜ் சிங், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீஸாரிடம் பேசியுள்ளார். ஆனால் அவர்களில் ஒருவர் குர்மேஜை தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்.

 துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டு, உள்ளூர் வாசிகள், அங்கு கபடி விளையாடியவர்கள் என கிட்டத்தட்ட 20 பேருக்கும் மேல் அங்குக் கூடி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உள்ளூர் போலீஸை வரவழைத்துள்ளனர். அந்த நேரத்தில் அவர்களை கைது செய்யவில்லை. ஆனால் அமர்ப்ரீத் கவுரின் மாமனார், முன்னாள் கிராமத் தலைவரும், ஷிரோமணி அகாலிதளத்தின்(எஸ்.ஏ.டி) உறுப்பினருமாவார். எனவே அவரின் தலையீட்டால் வேறுவழியின்றி குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302கீழ் வழக்குபதிவு செய்து போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

அமிர்தசரஸ் போக்குவரத்து காவல்துறையின் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் (ஏ.எஸ்.ஐ) ரஞ்சீத் சிங் மற்றும் பால்ஜீத் சிங், முன்னாள் மூத்த காவலருக்கு பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிள்கள் அவதார் சிங் மற்றும் பால்கர் சிங் மற்றும் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பாதுகாப்பு பணியில் இருக்கும் கான்ஸ்டபிள் சுரிந்தர் சிங் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்களுடன் கூட்டாளியான சிம்ரத் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement