சி யூ ஸூன் திரைப்படம் குறித்து நடிகர் பகத் DNA இணையதளத்திற்கு பிரத்யேகமாக பேசியுள்ளார்.
மலையாள நடிகர் பகத் பாசில் நடிப்பில், தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சி யூ ஸூன். த்ரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப்படத்தை டேக் ஆஃப் திரைப்படத்தை உருவாக்கிய மகேஷ் இயக்கியுள்ளார். வெளிப்புற படிப்பிடிப்புகள் ஏதும் இல்லாத ஊரடங்கு காலத்தில் வெளியே செல்லாமல் செல்போன் கேமரா மூலமே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த படத்தின் உருவாக்கத்தை காண ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் உள்ளனர். சர்ச்சிங் என்ற ஆங்கில திரைப்படம் போல இணையம், வீடியோ கால் என தொழில்நுட்ப உதவியுடன் இந்த படம் நகரும் என ட்ரைலர் மூலமே தெரிகிறது. இந்நிலையில் சி யூ ஸூன் திரைப்படம் குறித்து நடிகர் பகத் DNA இணையதளத்திற்கு பிரத்யேகமாக பேசியுள்ளார்.
அதில் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியில், ''கேரளா, யூஏஇ என இருவேறப்பட்ட இடங்களை சுற்றி படம் நகரும். ஆனால் படம் முழுக்க கொச்சியில் படமாக்கப்பட்டது. சி யூ ஸூன் திரைப்படத்தின் தொடர்ச்சி அடுத்த வருடம் வெளியாகும். அது இந்தப்படம் போல வித்தியாசமாக இருக்காது. வழக்கமான திரைப்படமாக வெளிப்புறங்களில் படப்பிடிப்பு செய்யப்படும். சி யூ ஸூன் திரைப்படத்தை இப்படி மிகவும் கட்டுபாட்டுக்குள் எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. வழக்கமாக எடுக்கவே நினைத்தோம். ஊரடங்கு அதற்கு வழி செய்யவில்லை'' என தெரிவித்துள்ளார்
பைக்கும் ஓட்டுவேன், கோலமும் போடுவேன்- மனம் திறக்கும் நடிகை சம்யுக்தா ஹெக்டே
Loading More post
"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது!" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
புதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
எங்கு நடக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி? - கங்குலி தகவல்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!