பைக்கும் ஓட்டுவேன், கோலமும் போடுவேன்- மனம் திறக்கும் நடிகை சம்யுக்தா ஹெக்டே

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெக்டே, "நான் பைக்கும் ஓட்டுவேன், கோலமும் போடுவேன்" என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மனந்திறந்து பேசியுள்ளார்.


Advertisement

"கடந்த 2019 ம் ஆண்டில் ஏழு மாதங்கள் நான் இந்தியாவிலேயே இல்லை. பெரும்பாலான நேரம் வியட்நாமிலும் ஐரோப்பிய நாடுகளிலும்தான் இருந்தேன். இந்த ஆண்டு ஏழு மாதங்கள் வீட்டிலேயே இருக்கும்படியாகிவிட்டது. இந்த நாட்களில் என்னுடைய திறன்களை மேம்படுத்திக்கொண்டேன்" என்று ஊரடங்கு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

image


Advertisement

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களா என்று கேள்விக்குப் பதிலளித்த சம்யுக்தா ஹெக்டே, " பப்பி, கோமலி படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். என் திறமையும் திறன்களும் பல்வேறு வகைகளில் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுகின்றன" என்கிறார்.

மேலும், "நான் நடிகையாக வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் நடுத்தர வர்க்கத்துக்குக் கீழே உள்ள குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு கிரிக் பார்ட்டி படத்திற்காக மிகப்பெரிய சம்பளம் கொடுத்தார்கள். அந்தப் பணத்தை என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை. அந்தப் படம் எனக்கு பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது " என்று கூறும் சம்யூக்தா, விரைவில் ஒரு தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக பேசிவருவதாகவும் கூறியுள்ளார்.

image


Advertisement

"முதலில் திரைப்படத்தில் நான் நடனத்தில்தான் தொடங்கினேன். பைக் ரைடிங், தற்காப்புக் கலை போன்ற விஷயங்களையும் செய்திருக்கிறேன். அதேநேரத்தில் கோலமும் போடுவேன்" என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார் சம்யுக்தா ஹெக்டே.

loading...

Advertisement

Advertisement

Advertisement