திருநின்றவூர் சி.டி.எச் சாலையில், சரஸ்வதி என்ற ரேவதி வசித்து வருகிறார். ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வந்த இவர், கணவர் ஜீவானந்தத்தை விட்டு பிரிந்த தனது 7 வயது மகன் சாமுவேலுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் பசி, பட்டினியால் தனது மகன் இன்று இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார் சரஸ்வதி. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநின்றவூர் காவல் துறையினர் சரஸ்வதி வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.
அங்கு 7 வயது சிறுவன் அழுகிய நிலையில் உயிர் இழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சிறுவனின் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிரிழந்து 3 தினங்களுக்கு மேல் அவரது தாய் சிறுவன் உடலுடன் வசித்து வந்துள்ளார்.
உண்மையில் சிறுவன் பசியால் உயிர் இழந்தானா அல்லது கொலை செய்து நாடகமாடி வருகிறாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி