நான் மூன்று வருடமாக கர்ப்பிணியாக இருக்கிறேன்; குழந்தைதான் வெளியே வர விரும்பவில்லை: சமந்தா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’நான்  2017 ஆம் ஆண்டிலிருந்து கர்ப்பமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால், குழந்தை வெளியே வர விரும்பவில்லை’ என்று நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.


Advertisement

கொரோனா ஊரடங்குச் சூழலால் சினிமா படப்பிடிப்புகள் கடந்த ஐந்து மாதங்களாக தடைபட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் நடிகைகள் தங்கள் நேரத்தை பொழுது போக்கிக்கொள்ள சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்கள்.

image


Advertisement

அப்படித்தான் நடிகை சமந்தாவிடமும் இன்ஸ்டாகிராமில் ’எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள்? என்று கேள்விகேட்கப்பட்டது. சமீபத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிடமும் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு பதிலளித்திருந்தார் அனுஷ்கா சர்மா. இந்நிலையில், அவரைத்தொடந்து நடிகை ’சமந்தாவிடமும் அதே கேள்வி கேட்கப்பட்டது

image

தமிழில் முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இவர்களின் திருமணத்திலிருந்து, தமிழ் ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஜூனியர் சமந்தா ஜூனியர் நாக சைதன்யாவை எதிர்பார்த்துகொண்டிருக்கிறோம் என்று பலரும் கூறிவருகின்றனர்.


Advertisement

இந்நிலையில்தான், ரசிகரின் கேள்விக்கு சமந்தா யாரும் எதிர்பாராத வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.  ’நான்  2017 ஆம் ஆண்டிலிருந்து கர்ப்பமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால், குழந்தை வெளியே வர விரும்பவில்லை’ என்று நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது. இதனிடையே குழந்தை பெற்றுக்கொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், சமூகம் நெருக்கடி கொடுக்கக்கூடாது. சமந்தா சரியான பதிலடியைத்தான் கொடுத்துள்ளார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Courtesy: https://www.dnaindia.com/entertainment/report-been-pregnant-since-2017-baby-doesn-t-want-to-come-out-samantha-akkineni-2840175

loading...

Advertisement

Advertisement

Advertisement