"சிஎஸ்கே குறித்து கருத்து தெரிவிக்க முடியாது"- சவுரவ் கங்குலி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிஎஸ்கே அணியின் இப்போதைய நிலை குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


Advertisement

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் யுஏஇ சென்றுள்ளன. அவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு பவுலர் மற்றும் உதவியாளர்கள் உட்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

image


Advertisement

இந்தச் சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா சொந்தக் காரணங்களுக்காக இந்தியா திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் ரெய்னா விளையாடமாட்டார் என்றும் தெரிவித்தது. இது கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பதான்கோட்டில் மர்ம நபர்களால் தன் அத்தையின் குடும்பம் தாக்கப்பட்டதாலும் மாமா இறந்ததாலும் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்பட்டது.

image

இதனிடையே ரெய்னாவுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட மனக்கசப்பே அவர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதற்கு காரணம் என உரிமையாளர் என்.சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில் தெரியவந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் "இப்போதுள்ள சிஎஸ்கே அணியின் நிலை குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது" என் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார்.


Advertisement

மேலும் "திட்டமிட்டப்படி சிஎஸ்கே சரியான நேரத்திற்கு போட்டியில் விளையாட தயாராகிவிடும் என நினைக்கிறேன். இந்தாண்டு ஐபிஎல் வெற்றிகரமாக நடைபெறும் என நம்புகிறேன். இந்தப் போட்டி தொடர் வெகுநாள்கள் நடைபெற இருக்கிறது. அனைத்தும் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்" என்றார் சவுரவ் கங்குலி.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement