வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் நெல்லை, திருவாரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காலையில் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் மாலை நேரத்தில் இடியுடன் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியிலும் மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் மலை தோட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி