[X] Close >

8 வயது சிறுமியை கண்ணாம்பூச்சி விளையாட அழைத்து பாலியல் வன்கொடுமை!

Six-teenagers-held-for-rape-of-8-year-old-in-Tripura
திரிபுராவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 பேர் கைது; அவர்களில் நால்வர் சிறுவர்!
 
திரிபுராவில் உள்ள ஒரு கிராமத்தில் 6 பேர், மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமியை கண்ணாம்பூச்சி விளையாட அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அச்சிறுமியை 6 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
 
வீடு திரும்பிய சிறுமி தனக்கு நேர்ந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நால்வர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் சிறார் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.
 
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது. 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம். இவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என வந்துள்ளதை அடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close