ஆதரவற்ற பெண்ணின் திருமணத்திற்கு சீர்வரிசை.. நெகிழ வைத்த உதவிய பெண் காவல் ஆய்வாளர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தாய், தந்தையை இழந்த பெண்ணிற்கு, காவலர்களின் உதவியுடன் பெண் ஆய்வாளர் நகை மற்றும் திருமண சீர்வரிசை அளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்திருக்கும் தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் ராஜேஸ்வரி. சட்டம் ஒழுங்கு பணிகளுக்கு இடையே காவல் நிலைய எல்லைக்கு உட்பட மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.


Advertisement

image
இந்நிலையில், புற்றுநோய்க்கு தாய் இறந்துவிட, தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், நிர்கதியாக நின்ற செங்குன்றத்தைச் சேர்ந்த சுகன்யாவை அரவணைத்தது அவரது சித்தப்பா - சித்தி குடும்பம். சுகன்யாவுக்கு கோவையைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் செய்ய முடிவான போதும், அதற்கான சீர்வரிசை பொருட்களை ஏற்பாடு செய்ய முடியவில்லை.

image
இந்தநிலையை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் சித்தி சுரேகா முறையிட, குறித்த நாளில் திருமணம் நடைபெறும் என உறுதி அளித்தார். அதன்படி சுகன்யாவின் திருமணத்துக்கு அரை சவரன் தங்கத் தோடு, ஒரு கிராமில் மூக்குத்தி, வெள்ளிக் கொலுசு, பீரோ, கட்டில், மிக்சி என 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை சக காவலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் பங்களிப்புடன் ஆய்வாளர் ராஜேஸ்வரி வழங்கினார்.

image
அதனை ஏற்றுக்கொண்ட மணமகள் சுகன்யா, தாயுள்ளம் கொண்ட ஆய்வாளரை கட்டியணைத்து ஆனந்த கண்ணீரில் நன்றி செலுத்தினார். காவல் நிலையம் என்றாலே வழக்கு, விசாரணை என்பதை தாண்டி, காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நிரூபித்துள்ளார் ஆய்வாளர் ராஜேஸ்வரி.


Advertisement

loading...
Related Tags : சென்னைChennaiChennai police

Advertisement

Advertisement

Advertisement