‘நாங்கள் எல்லோரும் குடும்பம் என்பதால் மாஸ்க் அணிய மாட்டோம்’ வைரலாகும் தீபக் சாஹரின் பேச்சு

DEEPAK-CHAHAR-SAID-THAT-We-do-nOt-wear-masks-because-we-are-all-family-NOW-HE-TESTED-POSITIVE-FOR-Corona

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் துபாயில் நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த சில வாரங்களில் ஆரம்பமாகியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உட்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.


Advertisement

image

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சற்று பின்னடைவாகவே அமைந்துள்ளது. 


Advertisement

குறிப்பாக சென்னை அணியின் டி20 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் கொரோனாவில் பாதித்துள்ளது பெருத்த சிக்கலாகவே அமைந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீபக் சாஹர் மற்றும் அவரது இளைய சகோதரர் ராகுலுக்கு இடையே நடைபெற்ற இன்ஸ்ட்டாகிராம் கான்வெர்சேஷன் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சென்னை பயிற்சி முகாமின் போது தீபக் சாஹர் இன்ஸ்ட்டாகிராமில் சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா, பியூஷ் சாவ்லா ஆகியோருடன் இருக்கும் படத்தை பகிர்ந்திருந்தார்.


Advertisement
 
 
 
View this post on Instagram

Finally ??? #Chennai #csk #ipl #herewego @chennaiipl

A post shared by Deepak Chahar (@deepak_chahar9) on

அதற்கு அவரது தம்பி "அண்ணா உங்கள் மாஸ்க் எங்கே? சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டாமா?” என ரிப்ளை கொடுத்திருந்தார். 

அதற்கு தீபக் சாஹர் ‘எல்லோரும் ஒன்றுக்கு இரண்டு முறைபரிசோதனை செய்து கொண்டுள்ளோம். நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம் என்பதால் மாஸ்க் அணிய மாட்டோம்’ என தெரிவித்துள்ளார். 

தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது. 

சென்னை அணியின் சீனியர் வீரர் ரெய்னா இந்தியா திரும்பியுள்ளதும் தோனி தலைமையிலான அணிக்கு கொஞ்சம் பின்னடைவு தான். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement