ஊரடங்கு உத்தரவை மீறியதாக  பொன்முடி உள்ளிட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் ஊரடங்கு விதிகள் மீறப்பட்டதாக  பொன்முடி உட்பட 317 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


Advertisement

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாற்றுக் கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் நடந்தது. அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 2500 க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

image


Advertisement

 

இது தொடர்பாக, ஊரடங்கு விதிமுறையை கடைபிடிக்காமல் அதிகளவில் பொதுமக்கள் கூட்டத்தை சேர்த்தல். நோய் பரவல் ஏற்பட காரணமாக இருப்பது என்பது உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ், பொன்முடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., லட்சுமணன், தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் புகழேந்தி, துணைச் செயலர்கள் ஜெயச்சந்திரன், புஷ்பராஜ் உட்பட 317 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement