அரியலூர் பெண் படுகொலை: குற்றவாளியை காட்டிக்கொடுத்த பைக் சாவி - நடந்தது என்ன.?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரியலூர் அருகே பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் பைக் சாவியை வைத்து துப்புதுலக்கிய  தனிப்படை போலீசார்.


Advertisement

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் காமராஜின் மனைவி மலர்கொடி (வயது 49). காமராஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இதையடுத்து மலர்கொடி, தனது மகன் கலைவாணனுடன் (25) வசித்து வந்தார். மலர்கொடி மாடுகள் வளர்த்து, பால் கறந்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு விற்று வந்தார். கலைவாணன் காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு வாகன டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

image


Advertisement

இந்நிலையில் காய்கறி லோடு ஏற்றுவதற்காக கலைவாணன் திருச்சிக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் மலர்க்கொடி மட்டும் தனியாக தூங்கியுள்ளார். கடந்த 24-ம் தேதி காலை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பால் வாங்க வந்தபோது, வீட்டிற்குள் மலர்கொடி கொடூரமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி அவர்கள், கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மலர்கொடியின் உடலை பார்வையிட்டனர். அப்போது, அவர் தலை நசுக்கப்பட்டு, உடல் பல இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. வயிறு கிழிந்து குடல் சரிந்த நிலையில் மிகவும் கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரை தாக்கி துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்ற ரீதியில் போலீசார் விசாரணையை துவக்கினர். 

image


Advertisement

இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரியலூர் மற்றும் கீழப்பழுவூர் போலீஸ் ஆய்வாளர் தலைமையில் இரு தனிப்படை அமைத்து  விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை விசாரணை வளைத்திற்க்கு கொண்ட வந்தனர். இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவில்சீமை கிராமத்தை சேர்ந்த விஜய்பாஸ்கர் என்பவரிடன் தொடர்பில் இருந்துள்ளார்.

மேலும் விஜய் பாஸ்கர் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 40 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். இவர் திருடும் நகைகளை பேச்சியம்மாள் தான் விற்று பணம் பெற்று தருவார் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் அரியலூர் போலீசார் ஏற்கனவே விஜய்பாஸ்கரை கொள்ளை வழக்குகளில் கைது செய்த போது பேச்சியம்மாளிடம் இருந்து தான் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் பேச்சியம்மாள் வந்த போது இந்த பழைய கதைகள் போலீசாருக்கு ஞயாபகம் வந்துள்ளது.

image

மேலும் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் மலர்கொடி இறந்த இடத்தில் ஒரு எக்செல் சூப்பர் வண்டியின் சாவி கிடந்துள்ளது. கொலை நடந்த அன்று இரவு விஜய் பாஸ்கர்  கீழப்பழுவூர் வந்தது தெரியவந்தது.

இவரை தேடிய போலீசார் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தளம் அருகே இருந்த விஜய்பாஸ்கரை கைது செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த சட்டையில் இரத்த கரையிருப்பதை பார்த்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.

அப்போது மலர்கொடி கொலையான அன்று விஜய்பாஸ்கர் போதையில் அதே பகுதியில் உள்ள பேச்சியம்மாள் வீட்டிற்க்கு வந்துள்ளார். ஏற்கனவே அவர் பேச்சியம்மாள் வீட்டிற்க்கு வந்த போது அவரின் மகள் செல்போனை இவர் எடுத்து கொண்டு போனதால் ஆத்திரத்தில் இருந்த பேச்சியம்மாள் வீட்டின் உள்ளே விடாமல் திட்டி அனுப்பிவிட்டார்.

போதையிலும் ஆத்திர மனநிலையிலும் இருந்த விஜய்பாஸ்கர் மலர்கொடி வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த போது  மலர்கொடி அதிர்ச்சியடைந்தார். அப்போது அவரிடம் தகாத முறையில் ஈடுபட முயன்ற போது மலர்கொடி  தப்பிக்க வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார். அப்போது தான் வைத்திருந்த கத்தியால் மலர்கொடி தலையில் தாக்கினார் விஜய்பாஸ்கர்.

இதனால் சுயநினைவை இழந்த மலய்கொடி மயங்கி இறந்துள்ளார். பின்னர் விஜய்பாஸ்கர் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மலர்க்கொடியை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிகிறது. பின்னர் அங்கிருந்து தப்பிய விஜய்பாஸ்கர் தனது பைக் சாவியை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து விஜய்பாஸ்கர் சட்டையில் படிந்திருந்த ரத்தம், மலர்கொடி வீட்டில் தவறவிட்ட பைக் சாவி, செல்போன் சிக்னல் தந்த தகவல் ஆகியவவற்றின் அடிப்படையில் மலர்க்கொடியை கொலை செய்தது விஜய்பாஸ்கர் தான் என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து விஜய்பாஸ்கரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

loading...
Related Tags : அரியலூர்

Advertisement

Advertisement

Advertisement